கடை ஏழு வள்ளல்கள்
"முதல் ஏழு வள்ளல் "
(1) செம்பியன்
(2) காரி (சகரி )
(3) விரதன்
(4) நிறுத்தி
(5) துண்டுமாரன்
(6) சாகரன்
(7) நலன்
"இடை ஏழு வள்ளல்"
(1) அக்குரன்
(2) சந்திமான்
(3) அந்திமான்
(4) சிசுபாலன்
(5) வக்ரன்
(6) கண்ணன்
(7) சண்டன்
"கடை ஏழு வள்ளல்"
1. பாரி
2. வாழ்வில் ஊறி
3. காரி (மலையமான்
4. பேகன்
5. எழினி (அதியமான் )
6. நல்லை
7. ஐ கண்டிரன்
பேகன் (வையாவிக் கோப்பெரும் பேகன் , பாரி ( வேள் பாரி , காரி (மலையன் திருமுடி காரி, ஆய் (ஆய் அண்டிரன் , அதிகன் (அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, நள்ளி (கண்டீரக் கோப் பெருநள்ளி, ஓரி (வல்வில் ஓரி – Reference to these seven patrons are in many Sangam Tamil Boooks. Here are some songs. I have also given a list of the songs that are in Purananuru about these kings.
குறுந்தொகை 84, 100, 196, 199, 210
சிறுபாணாற்றுப்படை
புறநானூறு – 105, 106, 107, 108, 118, 142, 144, 145, 153, 158, 240, 241
நற்றிணை – 6, 52, 253, 265, 320
அகநானூறு - 35, 69, 209
குறுந்தொகை 84, மோசிகீரனார், பாலை திணை – செவிலித்தாய் சொன்னது
பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே
கழல்தொடி ஆய் மழைதவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் தணியளே.
When I tried to hug her, she said
that I smelled of sweat.
Now I understand why she hates it.
She’s cooler than the āmbal flowers
that grow in bracelet-wearing king Āy’s
cloud covered Pothi mountains
among the fragrant vengai and kānthal. Translated by Vaidehi
பெயர்த்தனென் – when I tried, முயங்கயான் - to hug her, வியர்த்தனென் – that I smell of sweat, என்றனள் – she says, இனி அறிந்தேன் – now I understand, அது துனி ஆகுதலே – why she hated it, கழல் தொடி ஆய் – Āy wearing bracelets, மழை – clouds, தவழ் – floating, பொதியில் – in Pothi mountain, வேங்கையும் – vengai tree flowers, காந்தளும் – kānthal flowers (Malabar lily), நாறி – are fragrant, ஆம்பல் மலரினும் – more than the āmbal flower (water-lily), தான் தண் தணியளே – she’s cooler.
குறுந்தொகை 100, கபிலர், குறிஞ்சி – தலைவன் சொன்னது
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.
The one with bamboo-like shoulders
is hard to attain.
She’s delicate like the Kolli goddess
on the westside of strong-bowed Ori’s mountains
where mountain folk who live in small huts
fenced with kānthal bushes
sell fierce-eyed elephants’ tusks to feed their families,
and grow wild rice in the waterfall-fed wide land
where heavy-leaved kulavi grows nearby,
and remove the green maral weeds. Translated by Vaidehi
அருவிப் பரப்பின் – wide land where the waterfall falls, ஐவனம் வித்திப் – plant mountain rice, பரு இலைக் – heavy leaves, குளவியொடு – mountain jasmine, பசு மரல் – green maral plants, hemp, கட்கும் – remove, காந்தள் வேலிச் – fence with kanthal plants, சிறுகுடி – small huts/settlement, பசிப்பிற் -if hungry, கடுங்கண் – fierce eyed, வேழத்துக் – elephant’s, கோடு – tusks, நொடுத்து உண்ணும் – sell and feed (the family), வல்வில் ஓரி – Ori with his strong arrow, கொல்லிக் குட வரைப் – Kolli Hills western mountains, பாவையின் மடவந் தனளே – she’s innocent like the kolli goddess, மணத்தற் கரிய – hard to embrace , பணைப்பெருந் தோளே – bamboo like wide shoulders
குறுந்தொகை 196, மிளைக் கந்தனார், மருதம் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
She says this to him, when she realizes that his feelings for the heroine, have changed
வேம்பின் பைங்காகாய் என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.
Before, if my friend gave you a bitter neem fruit,
you would say that it was the finest sugar candy
but now, if she gave you clear ice-cold water
from the tanks of Lord Pāri on Mount Parampu,
chilled by the chilly month of Thai,
you would say that it was lukewarm and brackish.
That’s how much your love has changed, my lord. Translated by Robert Butler
வேம்பின் பைங்காகாய் – the bitter green neem fruit, என் தோழி தரினே – if my friend gave, தேம்பூங் கட்டி – sugar blocks, என்றனிர் – you would say, இனியே – now, பாரி பறம்பில் – King Pāri’s Parampu mountains, பனிச்சுனைத் – cool spring, தெண்ணீர் – clear water, தைஇத் – Thai, திங்கள் – month, தண்ணிய – cool (water), தரினும் – if given, வெய்ய உவர்க்கும் -hot and bitter, ,என்றனிர் – you say, ஐய – sir, அற்றால் – that is how it is, அன்பின் பாலே – your love for her
குறுந்தொகை 199. குறிஞ்சி – பரணர் – தலைவன் சொன்னது – தன் நெஞ்சிடம்
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய நெஞ்சே திண்
தேர்க்
கைவள் ஓரி கானந் தீண்டி
எறி வளி கமழு நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாயோள் வயின்
இன்றை யன்ன நட்பின் இ நோய்
இறுமுறை என வொன்று இன்றி
மறுமை உலகத்து மன்னுதல் பெறுமே.
Blessings my heart!
The fragrance in her black thick cool hair
is like that from the forests of the skilled Ori
with his sturdy chariots.
This love affliction that I have
for my beautiful girl today
is forever.
If I cannot get her in this life,
I will be rewarded with her in the next. Translated by Vaidehi
பெறுவது இயையாது ஆயினும் – even if (she’s) hard to get, உறுவது – benefit, ஒன்று -one உண்டுமன் – is there, வாழிய - blessings, நெஞ்சே – heart, திண் தேர் – sturdy chariot, கைவள் ஓரி – hand-skilled Ori, கானந் தீண்டி – touched his forest, எறி வளி – blowing wind, கமழு – fragrant, நெறி படு கூந்தல் – tightly braided hair, மை ஈர் ஓதி – black cool hair, மாயோள் வயின் – beautiful one,
இன்றை யன்ன – like today, நட்பின் இ நோய் – this love disease, இறுமுறை – get destroyed, என வொன்று இன்றி – without that,
மறுமை உலகத்து – next world, மன்னுதல் பெறுமே – will obtain rewards.
குறுந்தொகை 210, காக்கை பாடினியார் நச்செள்ளையார், முல்லை திணை – தோழி சொன்னது
The hero returns from his trip, and he’s happy that the friend took care of the heroine. He praises her and she
replies that the crows cawed and brought him back.
திண்டேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
ஏழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெரு தோள் நெகிழ்ந்து செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.
If you took the butter
from the cows of all the cowherds
in the woods of Nalli,
he of the sturdy chariots,
mixed it with the steaming rice
from all the fine paddy
that grows in the fields of Tondi,
and piled it into seven bowls,
that offering
would be little enough reward
for the crows that cawed good omens
bringing guests,
and an end to the sorrow
that has been making
my friend’s shoulder’s hollow. Translated by Robert Butler
திண்டேர் – sturdy chariot, நள்ளி – Nalli, கானத்து – his forest’s, அண்டர் – cattle herders, பல் ஆ பயந்த – many cows yielded, நெய்யின் – ghee, தொண்டி – Thondi city, முழுதுடன் விளைந்த வெண்ணெல் – all the white paddy grown (there), வெஞ்சோறு – cooked rice, ஏழு கலத்து – seven bowls, ஏந்தினும் – poured, சிறிது என் தோழி – it’s too little, my friend, பெரு தோள் நெகிழ்ந்து செல்லற்கு – remove the pain (in her) big shoulders, விருந்து வரக் – when guests come, கரைந்த காக்கையது பலியே – offering to the cawing crow.
கடையெழு வள்ளல்களின் சிறப்பு
பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் [84-87]
கருத்துரை – மழை ஓயாது பெய்யும் வளமிக்க மலைச் சாரலில், காட்டில் திரிந்த மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தவனும், ஆற்றலும் அழகும் நிறைந்தவனும், ஆவியர் குடியில் தோன்றியவனும், பெரிய மலை நாட்டுக்குத் தலைவனுமாகிய பேகனும்.
சொற்பொருள் விளக்கம் - வானம் – மழை, வாய்த்த – நன்கமைதல், வளமலைக்கவான் – வளமானமலை அடிவாரம், வளமான மலைச்சாரல், கானமஞ்ஞைக்கு – காட்டிலுள்ள மயிலுக்கு, கலிங்கம் – ஆடை, நல்கிய – கொடுத்த, அருந்திறல் – அரிய ஆற்றல், அணங்கின் – அழகினையும் உடைய, ஆவியர் – வேளாளர், வேடர், பெருங்கல் நாடன் – பெரிய மலைநாட்டுக்குத் தலைவன்.
பாரி
……………சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்; [87 – 91]
கருத்துரை – வண்டுகள் வந்து தேனை உண்ணுமாறு மணம் வீசும் மலர்களை உதிர்க்கின்ற புன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், சிறிய பூக்களைப் பூக்கின்ற முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரைக் கொடுத்தவனும், ஒலிக்கின்ற அருவி வீழும் மலைச் சாரலில் அமைந்துள்ள பறம்புமலைக்கு அரசனுமாகிய பாரியும்.
சொற்பொருள் விளக்கம் - சுரும்பு – வண்டுகள், உண – உண்ண, நறுவீ – மணம் வீசும் மலர்கள், உறைக்கும் – உதிர்க்கும், நாக – புன்னை மரங்கள், நெடுவழி – நெடிய வழியில், சிறுவீ – சிறிய மலர், முல்லைக்கு – முல்லைக் கொடிக்கு, பெருந்தேர் – பெரிய தேரினை, நல்கிய –கொடுத்த, பிறங்கு – ஒலிக்கும், வெள்ளருவி – வெண்மையான அருவி நீர், வீழும் – விழுகின்ற, சாரல் – மலைச்சாரல், பறம்பின் கோமான் பாரியும் – பறம்பு மலைக்குத் தலைவனாகிய பாரியும்,
காரி
……………………… கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரியும் [91-95]
கருத்துரை - தன்னை நாடி வந்த இரவலருக்கு, ஒலிக்கின்ற மணியும் வெண்மையான தலையாட்டமும் அணிந்த குதிரையோடு, உலகத்தவர் கேட்டு வியக்க அன்பு நிறைந்த சொற்களையும் கொடுத்தவன். பகைவர் கண்டு அஞ்சுகின்ற சினத்தீ விளங்கும் ஒளி வீசும் நீண்ட வேலினை உடையவன். வீரக்கழலும், வளையும் அணிந்துள்ள பெரிய கைகளை உடையவனுமாகிய காரியும்,
சொற்பொருள் விளக்கம் - கறங்குமணி, வால்உளை – வெண்மையான தலையாட்டம், புரவியொடு – குதிரையொடு, வையகம் மருள – உலகத்தவர் கேட்டு வியக்க, ஈர நல்மொழி – அன்புடை நல்ல சொற்கள், இரவலர்க்கு – யாசிப்பவர்க்கு, ஈந்த – வழங்கிய, அழல் – சினத்தீ, திகழ்ந்து – விளங்கி, இமைக்கும் – ஒளிவீசும், அஞ்சுவரு – அஞ்சத்தக்க, நெடுவேல் – நீண்டவேல், கழல்தொடி – காலிலே அணியக்கூடிய வீரக்கழலும், கையிலே அணிந்துள்ள தொடியும் (வளை
, தடக்கை – பெருமை பொருந்திய கை.
ஆய்
…………… நிழல்திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும் [95-99]
கருத்துரை – ஒளிவீசும் நீலமணியைத் தன்னகத்தே கொண்ட நாகம் தனக்குக் கொடுத்த ஆடையினை, ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள இறைவனுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தவன். வில்லைத் தாங்கிய, சந்தனம் பூசி உலர்ந்த வலிமை மிக்க தோளினை உடையவனும், அன்பான மொழிகளைப் பேசியவனுமாகிய ஆய் அண்டிரனும்,
சொற்பொருள் விளக்கம் - நிழல் – ஒளி, திகழ் – விளங்கும், நீல நாகம் – நீலமணியைத் தன்னகத்தே கொண்ட நாகம், நல்கிய – கொடுத்த, கலிங்கம் – ஆடை, ஆல் அமர் செல்வற்கு – ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள சிவனுக்கு, அமர்ந்தனன் – மகிழ்ச்சியுடன், கொடுத்த – வழங்கிய, சாவம் – வலி, தாங்கிய – ஏந்திய, சாந்து பலர் – சந்தனம் பூசி உலர்ந்த, திணிதோள் – திண்ணிய தோள், ஆர்வ நன்மொழி ஆயும் – அன்பான நல்ல மொழி பேசிய ஆய் அண்டிரனும்,
அதிகன்
……………………….. மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் [99-103]
கருத்துரை - மேகம் தங்கும் மலையில் மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரலில் அழகிய நெல்லி மரத்தில் அமிழ்தாக விளைந்த இனிய நெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்தவன். பகைவரை அழிப்பதற்கு உறுதியோடு எழுந்த சினத்தீயும், ஒளி மிக்க நெடிய வேலும் ஆரவாரமிக்க கடல் போன்ற படையும் கொண்டவனுமாகிய அதிகனும்,
சொற்பொருள் விளக்கம் : மால் – மேகம், வரை – மலை, கமழ்பூஞ்சாரல் – மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரல், கவினிய – அழகிய, நெல்லி – நெல்லி மரத்தில், அமிழ்து விளை – அமிழ்தாக விளைந்த, தீம்கனி – இனிய கனி, ஔவைக்கு – ஔவைப்பிராட்டிக்கு, ஈந்த – வழங்கிய, உரவுச்சினம் – உறுதியோடு எழுந்த சினம், கனலும் – சினத்தீயும், ஒளி திகழ் – ஒளிமிக்க, நெடுவேல் – நெடிய வேலும், அரவக்கடல்தானை அதிகனும் – ஆரவாரம் மிக்க கடல் போன்ற படையினையுடைய அதிகனும்,
நள்ளி
…………………………. கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும்; [103-107]
கருத்துரை – தன்னிடம் இருக்கும் பொருளை மறைக்காது அன்பு காட்டுவோர் மனம் மகிழுமாறு, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கான பொருளைக் குறைவின்றிக் கொடுத்தவன். போர் செய்வதில் வல்லவன். மழை விழுவதற்குக் காரணமான, காற்று தங்குகின்ற நெடிய குவடுகளைக் கொண்ட பெருமை பொருந்திய மலைநாட்டுக்குத் தலைவனாகிய நள்ளியும்,
சொற்பொருள் விளக்கம் - கரவாது – மறைக்காது, நட்டோர் – அன்பு காட்டுவோர், உவப்ப – மகிழ, நடைப்பரிகாரம் – வாழ்க்கை நடத்துவதற்கான பொருள், மட்டாது – குறைவிலாது, கொடுத்த – வழங்கிய, முனை விளங்கு தடக்கை – போர் செய்கின்ற பெருமை பொருந்திய கைகள், துளிமழை பொழியும் – மழைத்துளி விழுவதற்குக் காரணமான, வளிதுஞ்சு – காற்று தங்கும், நெடுங்கோட்டு – நீண்டகுவடுகள், நளிமலை நாடன் நள்ளியும் – பெருமை பொருந்திய மலைநாட்டுக்குத் தலைவனாகிய நள்ளியும்,
ஓரி
…………………….. நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை ஓரியும் [107-111]
கருத்துரை - நெருக்கமான கிளைகளில், நறுமணம் வீசும் அரும்புகளைக் கொண்டுள்ள இளமையான உயர்ந்த புன்னை மரங்களையுடைய சிறிய மலைகளைக் கொண்ட நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்கு அளித்தவன். காரி என்னும் குதிரையில் ஏறிவரும் காரி என்ற வள்ளலோடு போரிட்டவன். பிடரிமயிர் அமைந்த குதிரையினை உடையவன். இத்தகைய ஓரியும்,
சொற்பொருள் விளக்கம் - நளிசினை – நெருக்கமான கிளை, நறும்போது – நறுமணம் வீசும் அரும்பு, கஞலிய – விளங்கிய, நாகு – இளமை, முதிர் – உயர்ந்த, நாகத்து – புன்னை மரத்தை, குறும்பொறை – சிறிய மலை, நல்நாடு – நல்லநாடு, கோடியர்க்கு – கூத்தருக்கு, ஈந்த – வழங்கிய, காரக்குதிரை – காரி என்னும் குதிரையினையுடைய, காரியொடு – காரி என்ற வள்ளலொடு, மலைந்த – போரிட்ட, ஓரிக் குதிரை – பிடரிமயிரினையுடைய குதிரை,
……………………. என ஆங்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள் [111-112]
கருத்துரை – என்று பிறருக்குக் கொடுக்கும் தன்மையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட ஏழு வள்ளல்களும், தமக்கு எதிராக எழுகின்ற போரினை வென்ற கணைய மரத்தை ஒத்த தோளமைந்தவர்கள்.
சொற்பொருள் விளக்கம் - என ஆங்கு – என அக்காலத்து (சிறப்பாகச் சொல்லப்பட்ட
எழுசமம் – எதிராக எழுகின்ற போர், கடந்த – வென்ற, எழு – கணைய மரம், கடந்த – வென்ற, எழு – கணை மரம், உறழ் – ஏத்த, திணி தோள் – திண்ணிய தோள்.