தமிழின் சிறப்பு
தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்ற்றான் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன.
2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர்.
அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன
2500 ஆண்டாயினும் தமிழ் இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களும், தொல்காப்பிய இலக்கணமும், இன்று படித்தாலும் பொருள் புரிகிறது.
இது பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகும்.
தம் கல்லறையில் மேல் “இங்கே தமிழ் மாணவர் உறங்குகிறார் “ என்று கல்லில் பொறித்து வைக்குமாறு
(உயில்
எழுதி வைத்த முனைவர் ஜி.யு.போப்
கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
- பேராசிரியர் மனோன்மணியம்
தமிழ் பண்டையது; நலம் சிறந்தது;
உயர் நிலையில் உள்ளது; வடமொழி
உதவியின்றி இயங்கவல்லது.
மொழியறிஞர்
டாக்டர் கால்டுவெல்
Dr.Calwell