What's new

Tamil chat

Some cute words...


சிறுவனாய் இருக்கும் போது பைக் கேட்டு பிரார்த்தனை செய்தேன். அப்புறம் தான் புரிந்தது கடவுள் அப்படி வேலை செய்கிறதில்லை என்று. ஒரு பைக்கை திருடி ஆண்டவனிடம் மன்னிப்பை கேட்டுக்கொண்டேன்” - எர்னோ பிலிப்ஸ்

”குழந்தை பிறந்த முதல் பன்னிரண்டு மாதங்கள் அது பேசவும் நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த பன்னிரண்டு மாதங்கள் அது ஓரிடத்தில் உட்காரவும் வாயை பொத்தவும் கத்துகிறோம்” - பிலிஸ் டில்லர்

”வேறு யாருக்கோ நடக்கின்றவரை எல்லாமே வேடிக்கை தான்” - வில் ரோஜர்ஸ்

”ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி.
மற்ற இரண்டும் ஞாபகமில்லை” - சர் நார்மன் விஸ்டம்

”பயனுள்ள பொய்யை விட, கேடு விளைவிக்கும் உண்மை நல்லது” - எரிக் போல்டன்

”குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோருமே ஏற்கனவே பிறந்துவிட்டதை கவனித்தீர்களா?” - பென்னி ஹில்

”நாற்பதோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்” - ஹென்றி யங்மேன்

”யாரை உங்களுக்கு தெரியும் என்பது முக்கியமில்லை, அதை எப்படி மனைவி கண்டு பிடித்து விட்டாள் என்பது தான் முக்கியம்” - ஜோயி ஆடம்ஸ்

”சாக பயமில்லை. ஆனால் அது நடக்கும் போது நான் அங்கிருக்கக் கூடாது” - வுடி ஆலன்

”உண்மையான நண்பன் உங்கள் தோல்விகளை கண்டுகொள்ளமாட்டான், வெற்றிகளை சகித்துக்கொள்வான்” - டக் லார்சன்

”பேரம் பேசக் கூட செலவாகும் என ஒரு பெண்ணை புரியவைத்தல் ரொம்ப கஷ்டம்” - எட்கர் வாட்சன் கோவ்

”நகைச்சுவை இருவரிடையே உள்ள தூரத்தை குறைக்கிறது” - விக்டர் போர்ஜ்
 
.
Tamil is damn up on Google images :P

See how: Go to Google.com -> Images.. Search for 'English' and then for 'Tamil'

Get it now?? This is why I said Tamil is damn up!! :/
 
. . . . . .
He asked you to look on google ........Not look down .......:lol:

i did as instructed

capturenft.jpg
 
. .
போர் குறித்த ரஷ்ய இலக்கியங்கள் அனைத்துமே மகத்தானவை.முடிந்தால் வாசியுங்கள்.
*****************************************************
வரலாறு எப்பொழுதும் நமக்கு தவறாகவோ,ஒரு சார்பாகவோ,இருட்டடிப்பு செய்யப்பட்டோ தான் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது.பள்ளி புத்தகங்களில் இருந்தே இது தான் நிலை.உதாரணமாக அமெரிக்ககாரன் அணுகுண்டு போடலைனா ரெண்டாம் உலகப் போர் முடிஞ்சு இருக்காது என்று தொடர்ந்து நம்ப வைக்கப்பட்டு வந்து உள்ளதை சொல்லலாம்.போரின் முடிவில் வீசிய அணுகுண்டை போரின் துவக்கத்திலேயே வீசி இருந்தால் இந்த போருக்கே அவசியம் இருந்து இருக்காதே என்று அப்பொழுது நமக்கு கேட்க தோணவில்லை.உண்மை அதுவல்ல.

இரண்டாம் உலகப் போர் என்பது இரண்டு தத்துவங்களின் மோதல்.நாசிசம்/பாசிசம் இணைந்து கம்யூனிசத்தை ஒழித்துக் கட்ட துவக்கியதே இரண்டாம் உலகப் போர்.போரின் ஆரம்பத்தில் ஜெர்மனி,சோவியத்துடன் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டு இருந்தாலும் ஹிட்லர் திரும்ப திரும்ப சொல்லி வந்தது அனைத்து நாடுகளையும் வென்ற பின் நான் முழு பலத்துடன் சோவியத்தை நோக்கி திரும்புவேன் என்று தான்.ஹிட்லரின் குறி சோவியத்
என்பதை நன்றாக உணர்ந்து தான் மேலை முதலாளித்துவ நாடுகள் போரின் துவக்கத்தில் அமைதி காத்தது.

ஜூன் 1941 இல் துவங்கியது ஹிட்லரின் சோவியத் படையெடுப்பு.கிழக்கு போர் முனை என இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் பதியப்பட்டு வரும் இந்த போர்முனை தான் தோன்றிய நாள் முதல் உலகம் கண்டறிந்த மிகுந்த உக்கிரமான,வீரம் செறிந்த,மாபெரும் ராணுவ மோதலாகும்.உலகில் அதிக களப் பலி நிகழ்ந்த போரும் இதுவே.கிட்டத்தட்ட மூன்று கோடி பேர் மரணம் அடைந்த போர் முனை அது.அவர்களில் இரண்டு கோடி பேர் ரஷ்யர்கள்.ஹிட்லரின் படை மாஸ்கோ வரை முன்னேறி வந்து விட்ட போதும் இது நாள் வரையிலான போர்க்களங்கள் அறிந்திராத யுக்த்திகள் அனைத்தையும் சோவியத் செம்படை கைக்கொண்டது.பின் வாங்கி செல்லும் போது தங்களின் சொந்த நகரங்கள்,கிராமங்களை,வயல் வெளிகளை தாங்களே தீக்கிரையாக்கினர்.மக்களும் ஒத்துழைத்து வாழிடங்களை விட்டு காடுகளில் குடிபெயர்ந்தனர்.கைப்பற்றி உள் நுழையும் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு நபர் கூட இல்லாததைக் கண்ட ஜெர்மன் ராணுவம் மிகுந்த சோர்வுக்கு ஆளானது.ஒவ்வொரு சோவியத் குடிமகனும் ராணுவத்திற்கு தன்னால் ஆன பங்களிப்பை செய்தான்.பெண்களின் பங்களிப்பு இன்னும் மகத்தானது.இரண்டு லட்சம் சோவியத் பெண்கள் நேரடியாக போர்முனையில் பங்கேற்றனர்.ஒரு வேலை உணவை மட்டுமே ஒட்டு மொத்த தேசமும் உண்ணக் கூடிய சூழ்நிலை.தலைநகர் மாஸ்கோ தீக்கிரையாக்கப்பட்ட போதும் ஜெர்மன் ராணுவம் நுழையாத உள்நாட்டு பகுதிகளின் ஒவ்வொரு வீடும் ஆயுத தொழில்சாலை ஆனது.சோவியத் போர் வீரர்கள் போரிட்டுக் கொண்டே இருக்க,தொழிலார்கள் உழைத்துக் கொண்டே இருந்தனர்.உச்சகட்டமாக ஸ்டாலின்கிராடில் நடந்த யுத்தமே இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு வித்திட்டது.ஸ்டாலின்க்ராடை ஹிட்லர் வெற்றி கண்டு இருந்தால் உலக வரலாறு மாறியிருக்கும். போரில் சோவியத் இழந்தது தனது 10% மக்கள் தொகையை.
 
.
From Dinamalar.


"பொன்னியின் செல்வன்' கதை படமாகிறது!
"பொன்னியின் செல்வன்' கதையில் நடிக்க முயற்சி எடுத்த போது, திடீரென்று அரசியலில் பரபரப்பாகி விட்டதால், அந்த முயற்சியை அப்போது கைவிட்டார் எம்.ஜி.ஆர்., அவருக்கு பின், அந்த கதையை படமாக்க கமல் மற்றும் மணிரத்னம் ஆகியோரும் முயற்சி எடுத்து, அதுவும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், விக்ரம், ஆர்யா, ஜீவாவை வைத்து, அந்த கதையை படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார் செல்வராகவன். அவரது முயற்சிக்கு பலன் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
— சினிமா பொன்னையா.
 
.
இங்கே யாராவத் கோயமுத்தூர் ஏரியா கிடைக்கும் "காளான்" சாப்பிட்டிருக்கியா? vere enkum sulabhama kidaikkathu nu ninaikkire.

http://www.ramyaacooks.com/2012/01/coimbatore-roadside-kaalan-recipe.html
 
. . . .

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom