மத்திய அரசு விடுமுறை தினம் பற்றிய உண்மைகள்:
1. பொது கட்டாய விடுமுறை நாட்கள் 14 ( இந்தியா முழுமைக்கும் இதில் மாற்றம் இல்லை)
2. பொது விருப்ப விடுமுறை நாட்கள் 3 ( அந்தந்த மாநிலத்துக்குள், பொதுவாக அமையும்)
3. தனி நபர் விருப்ப விடுமுறை நாட்கள் 2 ( இது தனித்தனி நபர் விருப்பத்தை பொறுத்தது)
மேற்கண்ட 3 விதமான விடுமுறை நாட்களும், அததற்கான பட்டியலின், வரையறைக்குட்பட்டது.
.
.
14 நாட்கள் கொண்ட முதல் பட்டியல், அனைத்திந்தியாவுக்கும் கட்டாயமானது.
.
12 நாட்கள் கொண்ட இரண்டாவது பட்டியலிலிருந்து,
3 நாட்களை,
அந்தந்த மாநில பெருவாரி விருப்பம், வழக்கம் சார்ந்து தெரிவு செய்து கொள்ளலாம்.
மாநில தலைநகரில் இருக்கும் மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழு தெரிவு செய்யும் உரிமை பெற்றது.
தெரிவில் மத்திய அரசுக்கு பங்களிப்பு/பொறுப்பு எதுவுமில்லை.
.
35 அல்லது 36 நாட்கள் கொண்ட மூன்றாவது பட்டியலிலிருந்து, 2 நாட்களை,
ஊழியர் ஒவ்வொருவரும், அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்து, விடுமுறையாக உரிமையுடன் பெறலாம்.
தெரிவில், மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழுவுக்கோ, மத்திய அரசுக்கோ பங்களிப்பு/பொறுப்பு எதுவுமில்லை.
.
.
அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில், எவையேனும் வார விடுமுறை அல்லது வேலை செய்ய வேண்டாத நாட்களில் வந்தால்,
அதை ஈடு செய்யும் விதமாக, அதற்கான மாற்று விடுமுறை நாள் அனுமதிக்கப்படமாட்டாது.
இதன் பொருள்:
2012ல், 14 கட்டாய பொது விடுமுறை நாட்களில், மிலாடி நபி, புத்த பூர்ணிமா, பக்ரீத், முஹரம் ஆகியன சனி, ஞாயிறு கிழமைகளில் வந்தது. இவற்றுக்கு மாற்று விடுமுறை கிடையாது.
14 அகில இந்திய பொது விடுமுறை நாட்கள், 10 நாட்களாக ஆனது ஆனதுதான்.
( 2016ல், 14 கட்டாய பொது விடுமுறை நாட்களில், 25.12.2016 – கிறிஸ்துமஸ் ஞாயிறு வந்தது. இதற்கு மாற்று விடுமுறை கிடையாது. )
கட்டாய பொது விடுமுறை நாட்களில், இவ்வாறு இழப்பு ஏற்பட்டால். ஏற்பட்டதுதான்.
ஆனால், ஊழியர் நலக்குழு கட்டுப்பாட்டில் இருக்கும் 3 பொது விருப்ப விடுமுறை நாட்களில், சரியான தெரிவு முறை மூலம், இழப்பு ஏற்படாமல் சரி செய்யலாம்.
அதனால்தான், பொங்கல் திருநாள், வாரவிடுமுறையான சனிக்கிழமை வந்ததால், அதை 3 பொது விருப்ப விடுமுறை நாட்களில் ஒன்றாக, மாநில அளவில் அறிவிக்காமல், தனி நபர் விருப்ப விடுமுறை நாள் பட்டியலில் சேர்த்துவிட்டனர்.
இவ்வாறு சேர்க்கப்படுவது, பாரா 4ன்படி கட்டாயமாகிறது.
.
2012ல், ஞாயிற்றுக்கிழமை வந்த பொங்கல் திருநாளும், இவ்வாறே பொது விருப்ப விடுமுறை நாளில் சேர்க்கப்படவில்லை. தனி நபர் விருப்ப விடுமுறை நாள் பட்டியலில், சேர்க்கப்பட்டது.
அன்று, அதிகார போதையில், இது கண்ணுக்கு புலப்படவில்லை. இன்று மோடி ஃபோபியா நோய் தாக்குதலால், காட்சிப் பிழைகள், உண்மைகள் போல தோற்றமளித்து, நிழல் யுத்தம் புரிய தூண்டுகிறது.
.
.
சுருங்கக் கூறின்:
பொங்கல் திருநாள் விடுமுறை வகை பற்றிய முடிவுக்கு, மத்திய அரசு நேரடி பொறுப்பில்லை.
பணியாளர் நலக்குழுதான் முழுப்பொறுப்பு.
வார பொது விடுமுறை நாளான சனிக்கிழமையில் வரும் பொங்கல் திருநாளை, பொது விருப்ப விடுமுறை நாளாக பைத்தியக்காரத்தனமாக அறிவித்தால், ஒரு விடுமுறை நாளை, பெருவாரியான மத்திய அரசு ஊழியர்கள் இழக்க நேரிடும்.
இது போன்றதொரு கோரிக்கையை கேட்டு, இவ்விஷயத்தில் முடிவு செய்யும் அதிகாரமுடைய, பணியாளர் நலக்குழு, கெக்கலி கொட்டி சிரிக்கும்.
மத்திய அரசின் தொடர் வேலை துறைகள் மற்றும் தபால்துறை ஊழியருக்கு, சனியன்று வார பொதுவிடுமுறை இல்லாததால், அவர்கள்
தனி நபர் விருப்ப விடுமுறை நாளாக,
இதை அனுபவிக்கலாம்.
பிற மத்திய அரசு ஊழியருக்கான 3 பொது விருப்ப விடுமுறை நாட்களையும், அவர்களுடன் இணைந்து அனுபவிக்கலாம். எவருக்கும் நட்டமில்லை.
2012ல், வாரவிடுமுறை நாளில் பொங்கல் திருநாள் வந்தபோதும், பொங்கல் திருநாள், மத்திய அரசின் தொடர் வேலை துறை ஊழியருக்கு, தனி நபர் விருப்ப விடுமுறையாகவே இருந்தது.
அன்று மோடி ஃபோபியா நோய் இல்லாததால், நடுத்தெரு ஆர்ப்பாட்டம், கூச்சல், குழப்பம் இல்லாதிருந்தது.
.
.
போதையில்லாமல் போனால், சிலருக்கு ஆட்டம் அதிகமாக இருக்கிறது, என்பது ஒரு நகைமுரண்.
ஆம், அதிகார போதையில்லாமல் போனால், சிலர் நிதானமிழக்கின்றனர், என்பது நிதர்சனமாகும் உண்மை.
.
பி.கு:
மவுன சாமியார் காலத்து ஆணைக்குறிப்பு முதல் 2017க்கானது வரை, சரிபார்த்த பிறகு, இவை தொகுக்கப்பட்டுள்ளது.
(F.N0.12/.3/2011-SJCA-2 Dated the 27th June, 2011, F.No.12/8/2016-JCA-2 Dated the 24th June, 2016 – மத்திய அரசு மனிதவள அமைச்சக ஆணைக்குறிப்புகளில், முழு விவரம் அறியலாம்)